உள்ளாட்சி இடைத்தேர்தல்: இரட்டை இலை முடக்கத்தால் அ.தி.மு.க.வினர் அதிர்ச்சி!
By : Thangavelu
அ.தி.மு.க.வில் தற்போது எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு இடையில் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில், இரண்டு பேருக்கும் கையெழுத்திட்ட படிவம் வழங்கப்படாததால் ஜூலை 9ம் தேதி நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வினர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அதன்படி மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் உட்பட 34 பதவிகளுக்கு கட்சி சார்பாக போட்டியிடுபவர்களுக்கு அவர்களின் சின்னங்கள் ஒதுக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் அ.தி.மு.க. சார்பாக இப்பதவிகளுக்கு போட்டியிடும் நிர்வாகிகளுக்கு பார்ம் ஏ மற்றும் பார்ம் பி.யில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் கையெழுத்திட வேண்டும்.
ஆனால் தற்போதைய நிலையில் அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனால் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனால் இருவரும் படிவங்கள் அ.தி.மு.க.வுக்கு வழங்கப்படாத நிலையில் தற்போது சுயேட்சையாக போட்டியிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அ.தி.மு.க. தொண்டர்கள் மட்டுமின்றி நிர்வாகிகளும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Source, Image Courtesy: Maalaimalar