பிரசாரத்தில் மயக்கமடைந்த அ.தி.மு.க. தொண்டரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.!
நகரம், கிராமங்கள் என்று தொடர்ச்சியாக தினமும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார். அதே போன்று நேற்று தொண்டாமுத்தூர் தொகுதி கரும்பு கடை அன்பு நகர் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்.

By : Thangavelu
பிரச்சாரத்தின் போது மயக்கமடைந்த அதிமுக தொண்டரை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தண்ணீர் தெளித்து ஆசுவாசப்படுத்தி தனது காரில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ள சம்பவம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் 3வது முறையாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி போட்டியிடுகிறார். இதனால் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தொண்டாமுத்தூர் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
நகரம், கிராமங்கள் என்று தொடர்ச்சியாக தினமும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார். அதே போன்று நேற்று தொண்டாமுத்தூர் தொகுதி கரும்பு கடை அன்பு நகர் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அமைச்சரின் வாகனத்தின் முன்பு சென்று கொண்டிருந்த அதிமுக தொண்டர் ஒருவர் திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். இதனை கவனித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பிரச்சார வேனில் இருந்து கீழே இறங்கி தொண்டரின் முகத்தில் தண்ணீர் தெளித்து ஆசுவாசப் படுத்தினார். இதன் பின்னர் தன்னுடன் வந்த காரில் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
தொண்டர் மயக்கம் அடைந்ததும் உடனடியாக ஓடி வந்து உதவி செய்த அமைச்சருக்கு தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.
