பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்.!
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி ஆட்சியை பிடித்தது. இதனிடையே பிரதான அதிமுக கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை பிடித்தது. எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதனிடையே எதிர்க்கட்சி துணைத்தலைவர் மற்றும் கட்சியின் கொறடா இன்னும் தேர்வு செய்யப்படவில்லை.
இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பகல் 12 மணியளவில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத்தலைவர், கொறடா பதவி யாருக்கு என்று அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.
தமிழக சட்டமன்ற கூட்டம் வருகின்ற 21ம் தேதி ஆளுநர் உரையுடன் நடைபெறுகிறது. இதில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் எப்படி பணியாற்ற வேண்டும் என்பது குறித்து இதில் விவாதிக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.