Begin typing your search above and press return to search.
அ.தி.மு.க. மாநிலங்களவை எம்.பி. பதவியில் இருந்து கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ராஜினாமா.!
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கே.பி.முனுசாமி மற்றும் வைத்திலிங்கம் ஆகிய 2 பேரும் மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

By : Thangavelu
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கே.பி.முனுசாமி மற்றும் வைத்திலிங்கம் ஆகிய 2 பேரும் மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கே.பி.முனுசாமி. அதே போன்று தஞ்சாவூர், ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் வைத்திலிங்கம்.
தற்போது இரண்டு பேரும் மாநிலங்களவை எம்.பி. பதவியில் இருந்து வந்தனர். இரண்டு பதவியும் ஒரே நேரத்தில் வகிக்க முடியாது என்பதால், மாநிலங்களவை எம்.பி. பதவியை இரண்டு பேரும் ராஜினாமா செய்துள்ளனர்.
Next Story