அ.தி.மு.க. விருப்ப மனு நேரம் குறைப்பு.. காரணம் இதுதானாம்.!
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால் தமிழகத்தில் விருப்ப மனுக்களை விரைவில் வழங்குமாறு அதிமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது.
By : Thangavelu
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால் தமிழகத்தில் விருப்ப மனுக்களை விரைவில் வழங்குமாறு அதிமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி அதிமுக விருப்பமனுவை அளிக்க மார்ச் 5ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் மார்ச் 3ம் தேதியாக குறைக்கப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்பமனு கடந்த 24ம் தேதி தொடங்கி இன்று 6வது நாளாக விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளதை சுட்டிக்காட்டி, அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவர்கள் வருகின்ற 3ம் தேதிக்குள் விருப்பமனுக்களை பெற்று அவற்றை அன்றைய தினம் மாலை 5 மணிக்குள் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று அறிவித்துள்ளனர்.
தேர்தல் நேரம் நெருங்கி வருவதால் இந்த முடிவை எடுத்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.