இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,000.. முதியோர் உதவித்தொகை ரூ.1,500 என்னாச்சி.. தி.மு.க.விற்கு எதிராக போராட்டம் அறிவித்த அ.தி.மு.க.!
கேஸ் மானியம் ரூ.100 வழங்கப்படும் எனவும் கூறப்பட்டது. ஆனால் ஆட்சிக்கு வந்து இன்று மூன்றாவது மாதம் முடிவடைய உள்ளது. ஆனால் இதனை ஒன்றுக்கூட நிறைவேற்றவில்லை.

அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட கழக செயலாளர் கூட்டம் இன்று மாலை சென்னை ராயப்புரத்தில் நடைபெற்றது. இந்த கூட்டம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ1,000 வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியில் அளிக்கப்பட்டது.
அதே போன்று முதியோர் உதவித்தொகை ரூ.1,000 லிருந்து ரூ.1,500 ஆக உயர்த்தப்படும் என்ற வாக்குறுதியும் அளிக்கப்பட்டது.
மேலும், கேஸ் மானியம் ரூ.100 வழங்கப்படும் எனவும் கூறப்பட்டது. ஆனால் ஆட்சிக்கு வந்து இன்று மூன்றாவது மாதம் முடிவடைய உள்ளது. ஆனால் இதனை ஒன்றுக்கூட நிறைவேற்றவில்லை.
எனவே விரைவில் இந்த வாக்றுதிகளை நிறைவேற்றவில்லை எனில், இல்லதரசிகளை திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று அதிமுக தீர்மானத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.