உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராக அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கிய எடப்பாடி பழனிசாமி.!
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவிய பின்னர், கட்சியை வலுப்படுத்த அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தீவிரம் காட்டி வருகின்றனர்.
By : Thangavelu
கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் இருந்தது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அக்கட்சியில் பல்வேறு குழப்பங்களுடன் ஆட்சி நிறைவு பெற்றது. தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவிய பின்னர், கட்சியை வலுப்படுத்த அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதனால் சென்னையில் இருக்கும்போது தொண்டர்களை சந்திக்க இபிஎஸ், ஓபிஎஸ் முடிவெடுத்துள்ளனர். அது மட்டுமின்றி தொண்டர்களின் குறைகளையும் கேட்டு தீர்வு காண முடிவெடுத்துள்ளனர்.
மேலும், தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு இருப்பதால் அதில் அதிக கவனம் செலுத்துங்கள் என அதிமுக மாவட்ட செயலாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி அறிவுரை வழங்கியுள்ளார்.
புதிதாக உருவான 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை செப்டம்பர் மாதத்திற்குள் நடத்த வேண்டும் என
உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ள நிலையில், அதே நேரத்தில் தமிழகம் முழுவதும் மாநகராட்சி மற்றும் நகராட்சி தேர்தலை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.