ஆரணியில் அ.தி.மு.க. பிரமுகர் வீட்டிற்கு தீ வைத்த மர்ம கும்பல்.!
மனோகரன் ஆரணியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். தற்போது நடந்து முடிந்த ஆரணி சட்டமன்ற தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே அதிமுக பிரமுகரின் பண்ணை வீட்டிற்கு மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆரணி அடுத்துள்ளது முனுகப்பட்டு கிராமம், அந்த கிராமத்தில் வசித்து வருபவர் மனோகரன். இவர் அதிமுக பிரமுகர் ஆவார். முன்னாள் பஞ்சாயத்து தலைவர், ஒன்றிய கவுன்சிலராக பதவி வகித்துள்ளார்.
இதனிடையே மனோகரன் ஆரணியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். தற்போது நடந்து முடிந்த ஆரணி சட்டமன்ற தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில், அதிகாலை முனுகப்பட்டியில் உள்ள மனோகரனின் பண்ணை வீட்டில் புகுந்த மர்ம நபர்கள், வீட்டில் இருந்த பொருட்களுக்கு தீ வைத்துள்ளனர். இதில் வீட்டில் இருந்த ஏராளமான பொருட்கள் தீயில் கருகிறது. மேலும் அங்கிருந்த வாகனத்திற்கும் தீ வைத்து விட்டு மர்ம நபர்கள் தப்பியோடியுள்ளனர்.
தேர்தலில் தோல்வியுற்றவர்கள்தான் இதனை செய்திருக்க வேண்டும் என மனோகரன் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.