Kathir News
Begin typing your search above and press return to search.

அ.தி.மு.க., பொதுக்குழு எப்போது? ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்., இன்று அவசர ஆலோசனை.!

அ.தி.மு.க., பொதுக்குழு எப்போது? ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்., இன்று அவசர ஆலோசனை.!

அ.தி.மு.க., பொதுக்குழு எப்போது? ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்., இன்று அவசர ஆலோசனை.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  20 Dec 2020 9:51 AM GMT

தமிழகத்தில் அடுத்த வருடம் நடைபெறுகின்ற சட்டமன்ற தேர்தலுக்கு நாட்கள் குறைவாக உள்ளதால், ஆளுகின்ற கட்சியும், எதிர்கட்சிகளும் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் மக்கள் நீதி மய்ய கட்சித் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பரப்புரையை தொடங்கினார். இதனை தொடர்ந்து நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம், எடப்பாடி தொகுதியில் இருந்து தனது முதல் பிரச்சாரத்தை தொடங்கினார். பிரச்சாரத்தின் போது, ‘எடப்பாடி அ.தி.மு.க.வின் எஃகு கோட்டை, 43 வருடங்களாக அதிமுகவை தவிர யாரும் வெற்றி பெற்றதில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.



அதுமட்டுமின்றி பொங்கல் பரிசாக ரூ.2,500ஐ வழங்குவேன் என அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இவரது அறிவிப்பை திமுகவும் எதிர்பார்க்கவில்லை.
இந்நிலையில், அதிமுகவின் பொதுக் குழு கூட்டத்தை எப்போது கூட்டுவது என்பது தொடர்பாக இன்று மாலை 5.30 மணியளவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் சென்னையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

இந்த ஆலோசனையில் பொதுக்குழு கூட்டத்தின் தேதி பற்றிய முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News