தனிக்கட்சி பற்றி 20ம் தேதி ஆலோசனையா? - மு.க.அழகிரி பரபரப்பு தகவல்.!
தனிக்கட்சி பற்றி 20ம் தேதி ஆலோசனையா? - மு.க.அழகிரி பரபரப்பு தகவல்.!

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் தனிக்கட்சி தொடங்குவார் என்று கடந்த சில மாதங்களாகவே பேச்சு அடிப்பட்டு வந்தது.
திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு பின்னர் எந்த ஒரு அரசியல் நிகழ்வுகளிலும் பங்குபெறாமல் அமைதி காத்து வந்தார். ஏற்கனவே திமுகவில் எந்த ஒரு அதிகாரமும் அளிக்கப்படாமல் ஒதுக்கியே வைக்கப்பட்டுள்ளார்.
இதனால் அவர் அதிர்ச்சியில் இருந்து வந்தார். மதுரையை விட்டு வெளியேறாமல் தனது பண்ணை வீட்டிற்கும் நகரத்தில் உள்ள வீட்டிற்கும் சென்று வருவது வழக்கமாக கொண்டிருந்தார். எப்படியும் தனிக்கட்சி தொடங்கி திமுகவிற்கு பலத்த அடி விழும் என்று அவரது ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், தனிக்கட்சி தொடங்குவதாக குறித்து 20ம் தேதி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த இருப்பதாக வரும் தகவலை முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மறுத்துள்ளார்.
உதவியாளர் மூலம் வாட்ஸ் அப்பில் மு.க.அழகிரி அனுப்பிய செய்தியில் தனிக்கட்சி தொடங்குவது குறித்து ஆலோசனை நடத்த இருப்பதாக வெளியாகிய தகவல் தவறானது என மறுத்துள்ளார்.