ஆட்சிக்கு வந்தவுடன் தி.மு.க அமைச்சர்களுக்கு அதிகாரத் திமிர் வந்துவிட்டது - அண்ணாமலை
ஆட்சிக்கு வந்தவுடன் தி.மு.க அமைச்சர்களுக்கு அதிகாரத் திமிர் வந்துவிட்டது என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

By : Mohan Raj
ஆட்சிக்கு வந்தவுடன் தி.மு.க அமைச்சர்களுக்கு அதிகாரத் திமிர் வந்துவிட்டது என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் காமராஜரின் திருவுருவ சிலைக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னொரு செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'சேலம் பெரியார் பல்கலைக்கழக தேர்வில் கேட்கப்பட்ட சாதி தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தார்.
அப்போது பேசியவர், 'தி.மு.க'வை தோற்றுவித்த பெரியாரின் பெயர் ஒரு பல்கலைக்கழகத்திற்கு வைக்கப்பட்டுள்ளது, ஆனால் அங்கு இது மாதிரியான செயல்கள் நடக்குது என்றால் அவர்கள் எந்த சமூக நீதியை பேசுகிறார்கள் என கேள்வி எழுகிறது? மேலும் அங்குள்ள பேராசிரியர்கள் எந்தவிதமான மன நிலையில் உள்ளார்கள் என்பதை வெளிச்சம் போட்டு காட்டுவதாக இருக்கிறது, இது வன்மையாக கண்டிக்கத்தக்கது இது போன்ற நிகழ்வுகள் வருத்தம் அளிக்கிறது' என்றார்.
மேலும் தி.மு.க குறித்து அவர் பேசும்பொழுது தி.மு.க அமைச்சர்களுக்கு பிடித்த பொழுதுபோக்கு செல்லமாக அடிப்பது, தட்டுவது தமிழகத்தில் மட்டும் தான் இப்படி செல்லமாய் தட்டுவதை பார்க்கிறோம் ஒரு பேப்பரை எடுத்து தலையில் வைத்து கொட்டு கொட்டுகிறார்கள் பாரதிய ஜனதா கட்சி இது குறித்து கேட்டதற்கு செல்லாமல் அடித்தோம் என சப்பக்கட்டு கட்டுகிறார்கள் ஆட்சிக்கு வந்தவுடன் தி.மு.க அமைச்சர்களுக்கு அதிகாரத் திமிர் வந்துள்ளது' என குறிப்பிட்டார்.
