Kathir News
Begin typing your search above and press return to search.

மத்திய அரசு சாதனைக்கு திராவிட ஸ்டிக்கர் ஒட்டுவதா? அண்ணாமலை கண்டனம்!

பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவு மக்களை மத்திய அரசு இணைத்துள்ளதற்கு திராவிட ஸ்டிக்கர் ஒட்டபட்டுள்ளதாக அண்ணாமலை கண்டனர்.

மத்திய அரசு சாதனைக்கு திராவிட ஸ்டிக்கர் ஒட்டுவதா? அண்ணாமலை கண்டனம்!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  17 Sept 2022 1:29 AM

தமிழகத்தில் நரிக்குறவர்கள், குருவிக்காரர்கள் சமூகங்களில் மிகவும் நலிவடைந்த நிலையில் இருந்த பொழுதிலும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படாமல் இருந்தமையால் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் தவறிக் கொண்டே போயிருந்தன. கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக நரிக்குறவர்களும், குருவிக்காரர்கள் சமூகங்களும் மத்தியில் காங்கிரஸ் தி.மு.க ஆட்சியில் இருந்து தொடர்ந்து போராடிக் கொண்டிருந்தார்கள்..பல காரணமாக இவர்கள் கொடுத்துக் கொண்டிருந்த மனுக்கள் எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்கு கிடப்பில் போடப்பட்ட நரிக்குறவர்கள், குருவிக்காரர்கள் சமூகத்தை சேர்ந்த பல்வேறு அமைப்பினர், தமிழக பாஜக அலுவலகத்திற்கு வந்து தங்கள் குறைகளை எல்லாம் எடுத்துக் கூறினர்.


தொடர்ந்து 40 ஆண்டுகால போராட்டத்தையும் காங்கிரஸ் திமுக அரசு அவர்களின் உதாசீனத்தையும் மன வலிமையுடன் எடுத்துக் கூறினர். பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தனிப்பட்ட கவனத்திற்கு மத்திய அரசின் SC பிரிவினர் பதிவாளர் கவனத்திற்கு இம்மனுக்களை கொண்டு சென்று நரிக்குறவர்கள் குருவிக்காரர்கள் சமூகங்களை பட்டியலினர் அமைப்புகளின் கொண்டு சேர்க்கும் அரசியலமை அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்யும் பணி தமிழக பா.ஜ.கவல் விரைவாக மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் பிரதமர் தலைமையில் டெல்லியில் கூடிய மத்திய அமைச்சரவை கூட்டம் நரிக்குறவர்கள் குருவிக்காரர்கள் சமூகங்களை மாநிலத்தின் பழங்குடியினர் பட்டியில் சேர்க்க வகை செய்யும் அரசியல் அமைப்பு சட்டத் திருத்த மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளது.


மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின் போது நரிக்குறவ மக்களை பட்டியலின பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு தி.மு க ஏன் முயற்சி எடுக்கவில்லை? இப்பொழுது மத்திய அரசு செய்த சாதனைக்கு வழக்கம்போல், திராவிட ஸ்டிக்கர்கள் ஒட்டும் வேலையை தி.மு.க செய்வது வேடிக்கையாக இருக்கிறது. அடுத்தவர் சாதனைக்கு தங்கள் அரசை சாதனை செய்வதாக ஸ்டிக்கர் ஒட்டுவது திராவிட மாடலா? தங்களால் எதுவுமே உருப்படியாக செய்ய முடியாது என்று நம்புவதால், அடுத்தவர் உழைப்பில் ஒட்டிப் பிழைக்க ஸ்டிக்கர்கள் ஒட்டுகிறதா? தி.மு.க இவ்வாறு தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Input & Image courtesy: The Hindu News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News