Kathir News
Begin typing your search above and press return to search.

அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க., த.மா.கா.வுக்கு எத்தனை தொகுதிகள்.. இன்று மாலை ஒப்பந்தம்?

அதிமுக கூட்டணியில், தேமுதிக மற்றும் தமாகாவுக்கு எத்தனை தொகுதிகள் என்பது இன்று மாலைக்குள் இறுதி செய்யப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க., த.மா.கா.வுக்கு எத்தனை தொகுதிகள்.. இன்று மாலை ஒப்பந்தம்?
X

ThangaveluBy : Thangavelu

  |  8 March 2021 12:15 PM IST

அதிமுக கூட்டணியில், தேமுதிக மற்றும் தமாகாவுக்கு எத்தனை தொகுதிகள் என்பது இன்று மாலைக்குள் இறுதி செய்யப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் நாட்கள் குறைவாக உள்ள காரணத்தினால் அதிமுக, திமுக கூட்டணிகளை இறுதி செய்து வருகிறது. அதன்படி அதிமுக கூட்டணியில் பாமக, பாஜ கட்சிகளுக்கு தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு ஒப்பந்தமும் போடப்பட்டுள்ளது.




அதே நேரத்தில் தேமுதிக மற்றும் தமாகாவுடன் அதிமுக தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. இதில் இன்னும் இரண்டு கட்சிகளுக்கும் இடையே உடன்பாடு எட்டப்படவில்லை.

தேமுதிக சார்பில் 20 தொகுதிகள் வரை கேட்கப்படுவதாக கூறப்படுகிறது. அதிமுக தரப்பில் 13 முதல் 15 வரை தொகுதிகள் அளிக்கப்படும் என கூறப்பட்டது. ஆனால் இதனை ஏற்க தேமுதிக மறுத்துவிட்டது. இதுவரை இரண்டு கட்ட பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுள்ளது.




இந்நிலையில், தேர்தலுக்கு நாட்கள் குறைவாக உள்ள காரணத்தினால் கூட்டணியை விரைவில் முடிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் அதிமுக உள்ளது. இதனால் இன்று மாலைக்குள் தேமுதிக மற்றும் தமாகாவுடன் கூட்டணி உறுதி செய்யப்பட்டு விடும்.

தேமுதிகவுக்கு 17 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா எம்.பி., பதவியும் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளிவருகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News