Kathir News
Begin typing your search above and press return to search.

அ.தி.மு.க. கூட்டணியில் நாங்க இருக்கிறோம்.. தே.மு.தி.க. துணை செயலாளர் பார்த்தசாரதி தகவல்.!

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக அதிமுக, திமுக கட்சிகள் கூட்டணியை இறுதி செய்து வருகிறது.

அ.தி.மு.க. கூட்டணியில் நாங்க இருக்கிறோம்.. தே.மு.தி.க. துணை செயலாளர் பார்த்தசாரதி தகவல்.!
X

ThangaveluBy : Thangavelu

  |  5 March 2021 1:36 PM GMT

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக அதிமுக, திமுக கட்சிகள் கூட்டணியை இறுதி செய்து வருகிறது.

தற்போது வரை அதிமுக, பாமக, பாஜக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் இடம் பெற்றுள்ளதை வெளிப்படையாக தெரிவித்து விட்டனர். ஆனால் தேமுதிக கூட்டணி பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படாமல் இருந்து வருகிறது. அதிலும் தேமுதிக துணை செயலாளர் சுதிஷ் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றார். அதாவது அதிமுகதான் தேமுதிகவிற் தூது விட்டு வருகின்றது. நாங்கள் ஒருபோதும் அதிமுகவிடம் தொகுதிகள் குறித்தோ அல்லது கூட்டணி குறித்தோ பேசவில்லை என்று வெளிப்படையாக பேசினார்.





இவரது பேச்சுக்கு அதிமுகவில் கண்டனக் குரல் எழுந்தது. இதனால் இதனால் கூட்டணி பேச்சு வார்த்தையில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அதிமுக கூட்டணியில் தற்போது வரை நீடித்து வருகிறோம் என்று தேமுதிக துணை செயலாளர் பார்த்தசாரதி கூறியுள்ளார். மேலும் மாநிலங்களவை எம்.பி. பதவி தருவதாக அதிமுக ஒப்புக்கொண்டுள்ளது. எனவே இரண்டு நாளில் தொகுதி இறுதி செய்யப்பட்டு விடும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News