அதிமுகவும், பாஜகவும் இரட்டை என்ஜின் கொண்ட ரயில் போன்றது என்று அரவக்குறிச்சி வளர்ச்சிக்கு பாடுபடுவோம் என்றும் அத்தொகுதியின் பாஜக வேட்பாளர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
அதிமுக கூட்டணியில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதே போன்று அரவக்குறிச்சியில் பாஜக துணைத்தலைர் அண்ணாமலை போட்டியிடுகிறார். அவர் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் புடைசூழ இன்று தனது வேட்புமனுவை அரவக்குறிச்சி தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் தவச்செல்வனிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த அவர், 200 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்று, மக்களுக்கு நல்லாட்சி அளிப்பார். மேலும், திமுகவினர் அராஜகமாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை அன்று முடிவு கட்டுவோம்.
அதிமுக, பாஜக கூட்டணிக்கு மிகப்பெரிய அலை வீசுகிறது. இதனால் கரூர் மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் இந்த கூட்டணி அமோக வெற்றி பெறும். இவ்வாறு அவர் பேசினார்.