தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ளனர்.
அம்மா இல்லம் திட்டத்தின் கீழ் அனைவருக்கும் வீடு, மகளிருக்கு இலவச பேருந்து சலுகை, அம்மா வாஷிங் மெஷின், கல்லூரி மாணவர்களுக்கு 2ஜி டேட்டா இலவசம், ரேஷன் பொருட்கள் அனைத்தும் வீடு தேடி வரும், முதியோர் உதவித்தொகை ரூ.1000லிருந்து 2000 ஆக உயர்த்தப்படும். கல்விக்கடன் தள்ளுபடி, வீட்டில் ஒருவருக்கு அரசுப்பணி, விலையில்லா கேபிள் டிவி இணைப்பு இலவசம். இந்த அறிவிப்பால் அதிமுக தொண்டர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகமும் வரவேற்பு தெரிவித்துள்ளது.