அ.தி.மு.க. முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு.!
தமிழக சட்டசபை தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக தலைமை இன்று மதியம் வெளியிட்டுள்ளது.
By : Thangavelu
தமிழக சட்டசபை தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக தலைமை இன்று மதியம் வெளியிட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக அதிமுக கூட்டணி மற்றும் தொகுதி ஒப்பந்தங்களை பேசி முடித்துள்ளது. அதே போன்று அதிமுக வேட்பாளர் நேர்காணல் நேற்று ஒரே நாளில் முடித்தது.
இதனை தொடர்ந்து இன்று மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதன் பின்னர் ஆட்சி மன்றக்குழு கூட்டமும் நடைபெற்றது.
இந்நிலையில், அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி 4.6.2021 அன்று நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக கீழ்க் கண்டவர்கள் கீழ்காணும் சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதி, ஓ.பன்னீர்செல்வம், சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னை ராயபுரம், அமைச்சர் ஜெயக்குமார், விழுபுரம் அமைச்சர் சி.வி.சண்முகம், ஸ்ரீவைகுண்டம் எஸ்.பி. சண்முகநாதன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.