Kathir News
Begin typing your search above and press return to search.

சாத்தூர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ., கட்சியில் இருந்து நீக்கம்.!

அதிமுக கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் நடந்து கொண்டதால் அதிமுக சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

சாத்தூர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ., கட்சியில் இருந்து நீக்கம்.!
X

ThangaveluBy : Thangavelu

  |  11 March 2021 9:33 AM GMT

அதிமுக கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் நடந்து கொண்டதால் அதிமுக சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:




கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாலும், கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், விருதுநகர் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த சாத்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ராஜவர்மன் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறோம்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News