அ.தி.மு.க. எம்.எல்.ஏ., தோப்பு வெங்கடாசலம் கட்சியிலிருந்து நீக்கம்.!
நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படாததால், அதிமுகவை எதிர்த்து சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்த தோப்பு வெங்கடாசலத்தை அக்கட்சி தலைமை நீக்கியுள்ளது.

நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படாததால், அதிமுகவை எதிர்த்து சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்த தோப்பு வெங்கடாசலத்தை அக்கட்சி தலைமை நீக்கியுள்ளது.
இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உணடாகும் விதத்தில் பெருந்துறை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளரை எதிர்த்து சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ள காரணத்தாலும் ஈரோடு புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த தோப்பு வெங்கடாசலம் இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் ஈரோடு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.