Kathir News
Begin typing your search above and press return to search.

திருவண்ணாமலை, போளூர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தேர்தல் பரப்புரை.!

போளூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி போட்டியிடுகிறார்.

திருவண்ணாமலை, போளூர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தேர்தல் பரப்புரை.!
X

ThangaveluBy : Thangavelu

  |  24 March 2021 12:00 PM IST

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில், பாமக, பாஜக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் இணைந்து சந்திக்கிறது. அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டம், போளூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி போட்டியிடுகிறார்.

அவர் தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், போளூர் தொகுதிகுட்பட்ட பெரணமல்லூர் பகுதியில் பொதுமக்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது அங்கு கூடியிருந்தவர்களிடம் அவர் பேசியதாவது: செம்மாம்பாடி ஊராட்சியில் உள்ள நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்படும் என்று பேசினார். மேலும், பல்வேறு வகையிலான திட்டங்களை இந்த கிராமத்திற்கு கொண்டு வருவேன் எனவும் வாக்குறுதி அளித்தார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News