Kathir News
Begin typing your search above and press return to search.

எஸ்றா சற்குணம் மகள் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு.. அதிர்ச்சியில் தி.மு.க. கூட்டணி.!

பேராயர் எஸ்றா சற்குணத்தின் மகள் தலைமையில் பேராயர்கள் மற்றும் ஆயர்களை சந்தித்து, வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கப்படும் என்று கூறியுள்ளனர்.

எஸ்றா சற்குணம் மகள் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு.. அதிர்ச்சியில் தி.மு.க. கூட்டணி.!
X

ThangaveluBy : Thangavelu

  |  6 March 2021 11:45 AM IST

பேராயர் எஸ்றா சற்குணத்தின் மகள் தலைமையில் பேராயர்கள் மற்றும் ஆயர்களை சந்தித்து, வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கப்படும் என்று கூறியுள்ளனர்.

எப்போதும் இந்து மதத்தை தவறாக பேசி கொண்டு திமுகவிற்கு ஆதரவான நிலைபாட்டில் இருந்து வருபவர் எஸ்றா சற்குணம். தற்போது அவரது மகள் கதிரொளி மாணிக்கம் மற்றும் பேராயர்கள் ஒன்றிணைந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் ஆறு லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்ட மாபெரும் பேராயமாக இ.சி.ஐ., கிறிஸ்துவ திருச்சபை இயங்கி வருகிறது. இதன் நிரந்தர நிர்வாக பேராய பொறுப்பு வகித்து வருபவர் எஸ்றா சற்குணம். திமுகவின் ஆதரவாளராக இருக்கிறார்.

இவரது மகள் கதிரொளி மாணிக்கம் தலைமையில் பேராயர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். இதற்கு முதலமைச்சர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

இதனை கேள்விப்பட்ட திமுக தலைமை அதிர்ந்து போய் உள்ளது. நாங்கள்தான் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பாக உள்ளோம் என்று தம்பட்டம் அடித்து வரும் நிலையில், சற்குணம் மகள் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தது அரசியல் வட்டத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News