Kathir News
Begin typing your search above and press return to search.

அ.தி.மு.க., த.மா.கா. தொகுதி பங்கீடு நிறைவு.. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது. தொகுதி குறித்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ள நிலையில், இன்று அல்லது நாளை ஒப்பந்தத்தில் முறைப்படி கையெழுத்து ஆகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அ.தி.மு.க., த.மா.கா. தொகுதி பங்கீடு நிறைவு.. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
X

ThangaveluBy : Thangavelu

  |  5 March 2021 4:39 AM GMT

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது. தொகுதி குறித்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ள நிலையில், இன்று அல்லது நாளை ஒப்பந்தத்தில் முறைப்படி கையெழுத்து ஆகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.





அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம் பெறுவதற்கு குறைந்தது 12 தொகுதிகள் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதிமுக மற்றும் தமாகா கட்சிகள் தனியார் நட்சத்திர ஓட்டலில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில் இரண்டு கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.




அதிமுக சார்பில் அமைச்சர் வேலுமணி மற்றும் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். 2ம் கட்டமாக நடைபெற்ற பேச்சு வார்த்தை முடிந்துள்ளது. தமாகா சார்பில் 12 தொகுதிகள் கேட்டுள்ளதாகவும், அதிமுக சார்பில் 5 தொகுதிகள் வரை ஒதுக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் முறைப்படி அதிமுக தலைவர்களை சந்தித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்று கூறப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News