Kathir News
Begin typing your search above and press return to search.

"நான் உ.பி க்கு வருவதை 12 முறை அகிலேஷ் யாதவ் தடுத்தார்" - அசவுதீன் ஒவைசி கடும் தாக்கு!

"நான் உ.பி க்கு வருவதை 12 முறை அகிலேஷ் யாதவ் தடுத்தார்" - அசவுதீன் ஒவைசி கடும் தாக்கு!

நான் உ.பி க்கு வருவதை 12 முறை அகிலேஷ் யாதவ் தடுத்தார் - அசவுதீன் ஒவைசி கடும் தாக்கு!
X

Saffron MomBy : Saffron Mom

  |  13 Jan 2021 12:30 PM IST

அகில இந்திய மஜ்லிஸ்-இ-இன்டஹடல் முஸ்லிமீன் (AIMIM) தலைவர் அசாவுதீன் ஒவைசி செவ்வாய்க்கிழமை (இன்று) சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மீது கடுமையான தாக்குதலை முன்வைத்தார்.

அகிலேஷ் யாதவ் முதல்வராக இருந்தபோது தான் உத்தரப் பிரதேசத்துக்கு செல்லவிருந்ததை அவர் 12 முறை தடுத்ததாக கூறினார்.

உத்தரப் பிரதேசத்தில்தான் இம்முறை செல்லும் பொழுது அகிலேஷ் யாதவின் நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் அஸம்கர், மற்றும் கான்பூர் ஆகிய பகுதிகளுக்கு சென்றார்.

சுகல் தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் தலைவர் ஓம் பிரகாஷ் ராஜபார் அவருடன் இருந்தார். "ராஜ்பார் என்னுடைய நண்பர். எங்களுடைய பலத்தை நாங்கள் உத்திரப்பிரதேசத்தில் காண்பிப்போம்" என்றார்.

அகிலேஷ் மீதான தாக்குதல் சமாஜ்வாதி கட்சியின் முஸ்லிம் ஓட்டுகளை பிரித்து தங்கள் வசப்படுத்துவதற்கான முயற்சியாக இருக்கலாம்.

" நாங்கள் எங்களது தொண்டர்களையும் மற்ற மக்களையும் சந்தித்து வருங்காலத்திற்கு தேவையான திட்டங்களை தீட்டுவோம்" என்று அவர் கூறினார்.

டிசம்பர் மாதத்தில் சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியும் ராஜ் பாரும் இணைந்து 2022 உத்திரப்பிரதேச மாநில தேர்தல்களில் கூட்டணி அமைத்து பாக்தாரி சங்கல்ப் மோர்ச்சா என்ற கூட்டணியில் போட்டியிடுவோம் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது

Next Story
கதிர் தொகுப்பு
Trending News