எல்லா நாட்களிலும் கொரோனா தடுப்பூசி: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு.!
இதனையடுத்து இன்று முதல் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியானது தொடங்கியுள்ளது.
By : Thangavelu
கொரோனா தடுப்பூசியை அனைத்து நாட்களிலும் அரசு மற்றும் தனியார் மையங்களிலும் போட வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் 16ம் தேதி தடுப்பூசி போடும் பணியானது தொடங்கியது.
இந்நிலையில், நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில், இன்று (ஏப்ரல் 1ம் தேதி) முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இதனையடுத்து இன்று முதல் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியானது தொடங்கியுள்ளது.
இந்நிலையில், ஏப்ரல் மாதத்தில் அனைத்து நாட்களிலும் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்று அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. அரசு விடுமுறையாக இருந்தாலும் தடுப்பூசி போட வேண்டும் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஜூலை மாதத்துக்குள் 30 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தமிழகத்தில் இதுவரை 30.31 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.