மேகதாது அணை விவகாரம்.. அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு.!
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கலந்து ஆலோசிக்க தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்றக் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
By : Thangavelu
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடக அரசு புதிய அணை கட்டுவதற்கு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதனை சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதனிடையே மேகதாது அணை கட்டுவதற்காக தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது என்று கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
அதற்கு பதில் கடிதமாக முதலமைச்சர் ஸ்டாலின் மீண்டும் கர்நாடக முதலமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், அணை கட்டுவதால் தமிழக விவசாயிகளின் நலன் பாதிக்கப்படும் எனவும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு இது எதிராக அமையும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கலந்து ஆலோசிக்க தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்றக் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். வருகின்ற (ஜூலை 12) திங்கட்கிழமை அன்று காலை 10.30 மணியளவில் தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற உள்ளது.