Kathir News
Begin typing your search above and press return to search.

அனைத்து பிரச்சினைகளையும் விவாதிக்க அனைத்துகட்சிக் கூட்டம் - மத்திய அரசு!

நாடாளுமன்றத்தில் அனைத்து பிரச்சனைகளையும் விவாதிக்க தயாராக இருப்பதாக அனைத்து கட்சி கூட்டத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அனைத்து பிரச்சினைகளையும் விவாதிக்க அனைத்துகட்சிக் கூட்டம் - மத்திய அரசு!

KarthigaBy : Karthiga

  |  3 Dec 2023 7:15 AM GMT

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது 22-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் பல்வேறு முக்கிய அலுவல்களை மேற்கொள்ள மத்திய அரச திட்டமிட்டு இருக்கிறது. குறிப்பாக மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு பதிலாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதாக்கள் உட்பட பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற பட்டியலிடப்பட்டிருக்கிறது.

அத்துடன் 2023-24ம் தேதி ஆண்டுக்கான துணை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் வாக்கெடுப்பு ஆகியவற்றையும் மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. எனவே இந்த தொடரை சுமூகமாக நடத்த அரசு விரும்புகிறது. இதற்கு எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பை பெறுவதற்காக நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. நாடாளுமன்ற விவகாரத் துறை மந்திரி பிரகலாத் ஜோஷி நடத்திய இந்த கூட்டத்தில் மத்திய மந்திரிகள் ராஜ்நாத்சிங், பியூஸ் கோயல் , காங்கிரஸ் தலைவர்கள் ஜெயராம், ரமேஷ் ,கவுரவ் கோகாய், பிரமோத் திவாரி, காங்கிரஸ் எம்.பி சுதீப் பந்தோபாத்தியாய் தேசியவத காங்கிரஸ் தலைவர் பவுசியா கான், புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி தலைவர் பிரேமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் குளிர்கால கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரல் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சி எம்பிக்கள் பலரும் மூன்று குற்றவியல் மசோதாக்களுக்கு ஆங்கில பெயரை சூட்ட கோரிக்கை வைத்தனர். மேலும் விலைவாசி உயர்வு விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துதல் மணிப்பூர் விவகாரம் போன்ற பிரச்சனைகளையும் அவர்கள் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் விவாதிக்க வலியுறுத்தினர். இந்த கூட்டத்துக்குபின் மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் 19 மசோதாக்கள் மற்றும் இரண்டு நிதித்துறை அலுவல்களை மேற்கொள்ள பரிசீலிக்கப்பட்டு வருகிறது. அவையை நடத்துவதற்கு எதிர்கட்சிகள் வழங்கி உள்ள பரிந்துரைகளை அரசு நேர்மறையாக எடுத்துள்ளது. அனைத்து பிரச்சனைகள் குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசு உறுதியாக இருப்பதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆக்கப்பூர்வமான விவாதத்துக்கு அரசு முழுமையாக தயாராக உள்ளது . அதே நேரம் விவாதம் நடத்துவதற்கு ஏற்ற சூழலை எதிர்க்கட்சிகள் உருவாக்க வேண்டும். அவையை சுமூகமாக நடத்த அனுமதிக்குமாறு எதிர்க்கட்சிகளை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு பிரகலாத் ஜோஷி கூறினார்.

இதற்கிடையே காங்கிரஸ் எம்.பி.யும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் துணை தலைவருமான பிரமோத் திவாரி செய்தியாளர்களிடம் பேசும்போது, நமது நிலத்தை சீனா ஆக்கிரமிக்கும் விவகாரம், மணிப்பூர் பிரச்சினை, விலைவாசி உயர்வு ,விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து எதிர்க்கட்சிகளின் கவலையை அரசுக்கு தெரிவித்துள்ளோம். இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News