Kathir News
Begin typing your search above and press return to search.

'தமிழகத்திற்கான முதலீடுகள் அனைத்தும் பிரதமர் மோடியின் பி.எல்.ஐ திட்டத்தின் மூலம் ஈர்க்கப்பட்டுள்ளது'- பெருமை பேசி வரும் தி.மு.க விற்கு அண்ணாமலையின் பதில்!

'அதானி குறித்து விமர்சனம் செய்த தி.மு.க தலைவர்கள் அவர் தமிழகத்தில் முதலீடு செய்தவுடன் பாராட்டுகின்றனர்' என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழகத்திற்கான முதலீடுகள் அனைத்தும் பிரதமர் மோடியின் பி.எல்.ஐ திட்டத்தின் மூலம் ஈர்க்கப்பட்டுள்ளது- பெருமை பேசி வரும் தி.மு.க விற்கு அண்ணாமலையின் பதில்!
X

KarthigaBy : Karthiga

  |  10 Jan 2024 11:15 AM IST

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் தமிழகம் ரூபாய் 6 லச்சத்து அறுபதாயிரம் கோடி முதலீட்டை ஈர்த்துள்ளது. ஆனால் பா.ஜனதா ரூபாய் 10 லட்சம் கோடி வரையிலான முதலீடுகளை எதிர்பார்த்தது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உத்திர பிரதேசத்தில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஆந்தர அரசு ரூபாய் 33 லட்சத்து 51 ஆயிரம் கோடி முதலீடுகளை ஈர்த்தது. தமிழக அரசு ஈர்த்த முதலீடுகளை காட்டிலும் உத்தர பிரதேசம் ஐந்து மடங்கு அதிக அளவு முதலீடுகளை ஈர்த்துள்ளது.


தமிழகத்தில் தற்போது ஈர்க்கப்பட்ட முதலீடுகளை வரவேற்கிறோம். இதற்காக பெருமை பேசுவதை திமுகவினர் தவிர்க்க வேண்டும் .பிரதமர் மோடி முதலீடுகள் தொடர்பாக தமிழகத்திற்கு என்ன ஒத்துழைப்பு வேண்டுமோ அதை அதை வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டார் என மதிய மந்திரி பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். இந்த முதலீடுகள் திமுகவிற்காக வரவில்லை. பிரதமர் மோடியின் பி.எல்.ஐ திட்டத்தின் மூலம் ஈர்க்கப்படுகிறது.தேர்தல் நேரத்தில் அதானி குடும்பத்தை தவறாக பேசிய திமுக தலைவர்கள் தற்போது அந்த குடும்பத்தில் இருந்து 42,768 கோடி முதலீடு பெற்ற பிறகு அதானியை பாராட்டுகிறார்கள் .


அதே போல் அம்பானி ரூபாய் 35 ஆயிரம் கோடியும், டாட்டா ரூபாய் 83 ஆயிரத்து 212 கோடியும் முதலீடு செய்துள்ளனர். இவை அரசியல் கடந்து சில கட்சிகள் தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக மட்டும் பாடுபட வேண்டும் என்பதையே காட்டுகிறது .விரைவில் கடன் சுமைகளுக்காக மத்திய அரசிடம் ரூபாய் மூன்று லட்சம் கோடி வரை வட்டி இல்லா கடனை தமிழக அரசு கேட்கத்தான் போகிறது. அதற்கான அடித்தளத்தை அமைக்க ஆரம்பித்து விட்டார்கள். கடன் சுமையின் தாக்கம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் தெரியும் .இவ்வாறு அவர் கூறினார்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News