வாக்கு வங்கிக்காக தான் காங்கிரஸ் செயல்படுகிறது - அமித் ஷா குற்றச்சாட்டு!
வாக்கு வங்கி அரசியலுக்காகவே தான் காங்கிரஸ் தற்போது பாடுபடுகிறது என்று மத்திய அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார்.
By : Bharathi Latha
ஒரு தரப்பினரை திருப்திப்படுத்தும் அரசியலுக்காக மட்டும் தான் காங்கிரஸ் ஆல் பாடுபட முடியும். நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக அவர்களால் பாடுபட முடியாது என்றும், வாக்கு வங்கி அரசியலுக்காக தான் அவர்கள் பல விஷயங்களை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா அவர்கள் குற்றம் சாட்டியிருக்கிறார். ராஜஸ்தான் மாநிலத்திற்கு வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் இந்திய பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய தனோத் மாதா கோவிலில் சனிக்கிழமை வழிபாடு மேற்கொண்டார்.
பின்னர் ஜோத்பூரில் நடைபெற்ற வாக்குச்சாவடி அளவிலான பா.ஜ.க நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற சிறப்புரை ஆற்றினார். அப்போது உதய்பூரில் முஸ்லிம் அடிப்படை வாதிகளால் தையல் கலைஞா் கொல்லப்பட்ட சம்பவத்தை குறிப்பிட்ட அவர், வாக்கு வங்கி மற்றும் ஒரு தரப்பினரை திருப்திப்படுத்தும் அரசியலுக்காக மட்டுமே காங்கிரசால் பாடுபட முடியும் என்றும், நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட முடியாது என்று அவர் கூறியிருக்கிறார்.
ராகுல் காந்தி தற்போது மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை பயணத்தையும் அவர் விமர்சித்துக் கூறியிருக்கிறார். நாடாளுமன்றத்தில் ராகுல் என்ன பேசினார் என்பதை அவருக்கும் மற்ற காங்கிரஸ்க்கும் நினைவுபடுத்த நான் விரும்புகிறேன் என்று கூறி ராகுல் காந்தி அவர்கள் கூறிய கருத்தை முன் வைத்தார். இந்தியா ஒரு நாடு அல்ல என்றும், அப்படி எந்த புத்தகத்தில் படித்தார் தேச நலனுக்காக பல லட்சக்கணக்கான மக்கள் உயிர்த்தகம் செய்த நாடு இதுவாகும். வெளிநாட்டு தயாரிப்புகளான டி-சா்ட் அணிந்து கொண்டு இந்திய ஒற்றுமை பயணத்தை நடத்தி வருகிறார். முதலில் அவர் இந்திய வரலாற்றைப் படிக்க வேண்டியது அவசியம் என்று கூறியிருக்கிறார்.
Input & Image courtesy: Dinamani