காங்கிரஸ் ஒரு மூழ்கும் கப்பல் - அமித்ஷாவின் அதிரடி!
நாடாளுமன்ற தேர்தல்களுக்கு பிறகு அரசியலில் இருந்து காங்கிரஸ் வெளியேறும் ஒரு மூழ்கும் கப்பல் போன்றது என்று அமித் ஷா கூறுகிறார்.
By : Bharathi Latha
இமாச்சலப் பிரதேச சட்டசபை தேர்தலையொட்டி அங்குள்ள ஹமீர்பூர் மாவட்டம் நடான் கஸ்வா பா.ஜ.க வேட்பாளருக்கு ஆதரவாக அந்த தொகுதியில் உரையாற்றுவதற்காக மத்திய உள்துறை அமைச்சர் பிரச்சார பயணம் மேற்கொண்டார். தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அமைச்சர், லட்சக்கணக்கான மக்களை கொரோனாவில் இருந்து காப்பாற்றியது நாடு முழுவதும் உள்ள பா.ஜ.க அரசுகள் தான். பிரதமர் மோடியின் முயற்சியால் இந்தியாவிலேயே தடுப்பூசி தயாரித்து நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட்டது. வேறு எந்த நாட்டிலும் எந்த தலைவரும் இத்தகைய சாதனைகளை செய்வது இல்லை.
அதனால் உலகம் மோடியை பாராட்டுகிறார்கள். முன்பு அதிக விலை கொடுத்து இறக்குமதி செய்த பொருட்களை எல்லாம் இப்பொழுது நாமே தயாரிக்கிறோம். மோடி கலைப்பின்றி நீண்ட நேரம் பணியாற்றக்கூடிய ஆற்றல் பெற்றவர். இத்தகைவர்தான் நாட்டையும் மாநிலங்களையும் ஆள தேவைப்படுகிறார். 370 சட்டப்பிரிவை நீக்கி காஷ்மீர் மக்களுக்கு அனைத்து வசதிகளையும் கொண்டு சேர்த்தோம். அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுகிறது 2024 ஆம் ஆண்டு கோயில் திறக்கப்படும். பிரதமர் மோடி பக்திமான் என்பதால் வாரணாசி, கேதர்நாத், பத்ரிநாத், அயோத்தி ஆகியவற்றில் உள்ள இந்து கோவில்கள் மறு சீரமைக்கப்பட்டுள்ளன.
காங்கிரஸ் கட்சி முற்றிலும் ஒரு பொய்யானவர்களை கொண்டது பொய்யான விளக்கங்களை எழுதி மக்களை முட்டாளாக்க பார்க்கும் தேர்தல் முடிந்தவுடன் தனது வாக்குறுதிகளை மறந்து விடும். பா.ஜ.க மட்டும் தான் தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் காங்கிரஸ் கட்சி ஒரு மூழ்கும் கப்பல். அதற்கு எதிர்காலம் இல்லை 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் இந்த அரசியல் அரங்கில் இருந்தே காங்கிரஸ் வெளியேறிவிடும். ராகுல் காந்தி தனது பாதயாத்திரை காரணமாக வைத்து இங்கு வருவதை தவிர்த்து வருகிறார். எதிர்க்கட்சிகளின் தீய நோக்கங்களும் மக்கள் இரையாக வேண்டாம். உங்கள் எதிர்காலம் பாதுகாக்கப்பட வேண்டுமானால் அவர்களை நிராகரிங்கள் என்று அவர் பேசி இருக்கிறார்.
Input & Image courtesy: Maalaimalar News