தமிழில் மருத்துவ பாடம் வேண்டும் என்ற அமித்ஷா - இதோ தயார் என ஓடிவரும் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
இறுதினங்களுக்கு முன்பு அமித்ஷா தமிழகம் வரும்பொழுது தமிழில் மருத்துவ படங்கள் வேண்டும் என கேட்டுக் கொண்டதை தொடர்ந்து தற்பொழுது மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தமிழில் மருத்துவ படங்கள் வேகமாக தயாராகிறது என கூறியுள்ளார்.

By : Mohan Raj

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக நீரிழிவு நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது, 'கடந்த ஓராண்டாக மருத்துவ பாடப் புத்தகங்களை தமிழில் மொழிபெயர்க்கும் பணி நடந்து வருகிறது.
இந்த பணியை செய்து முடிப்பதற்காக மூன்று மருத்துவர்களுக்கு ஆயற்பணி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஏழு புத்தகங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. மேலும் சில புத்தகங்கள் மொழிபெயர்க்கும் பணி நடந்து வருகிறது' என கூறினார்.
இதுநாள் வரை தமிழில் மருத்துவ புத்தகங்களை மொழிபெயர்க்கிறோம் என அதிகம் வெளியில் கூறாத சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அமித்ஷா வந்து தமிழில் மருத்துவப் பாடங்கள் தேவை என கூறிய பிறகு 'புத்தகங்கள் மொழிபெயர்க்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது' எனக் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.