நம்முடைய முதல்வரை போல ஒரு விளம்பரம் முதல்வரை இந்தியாவில் பார்க்க முடியாது - அந்தியூரில் அசால்ட்டாக டீல் செய்த அண்ணாமலை
'விளம்பர மேனியா' நோயால் முதல்வர் ஸ்டாலின் பாதிக்கப்பட்டுள்ளார் என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

By : Mohan Raj
'விளம்பர மேனியா' நோயால் முதல்வர் ஸ்டாலின் பாதிக்கப்பட்டுள்ளார் என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
ஆவின் பால் விலை, மின்கட்டணம், சொத்து வரி உள்ளிட்ட உயர்வை கண்டித்து ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பா.ஜ.க சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பேசுகையில், 'தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு ஒவ்வொரு பொருளின் விலையும், வரியை உயர்த்தி வருகிறது. விலையை உயர்த்துவதில் அமைச்சர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
ஆட்சிக்கு வந்ததும் சொத்துவரி, மாநகராட்சியில் குடிநீர் கட்டணம், மற்ற மாநிலங்களை விட பெட்ரோல், டீசல் விலை உயர்வு, ஆவின் பொருள்களான பால், ஐஸ் கிரீம் போன்றவற்றின் விலையையும் மின் கட்டணத்தையும் உயர்த்தியுள்ளனர். கடந்த 16 மாதங்களாக நடைபெறும் தி.மு.க ஆட்சியின் ஒரே சாதனை விலைவாசி உயர்வும், வரி உயர்வும் மட்டும்தான்.
நம்முடைய முதல்வரை போல ஒரு விளம்பரம் முதல்வரை இந்தியாவில் பார்க்க முடியாது அலுவலகத்தில் இருந்து வீட்டுக்குப் போகும்போது யாராவது நான்கு பேர் சுத்தம் செய்து கொண்டிருந்தால் அதனை வீடியோவாக எடுத்து தனது முகநூலில் பதிவிடுகிறார். தன்னை பற்றி அனைத்தையும் விளம்பரப்படுத்திக் கொள்ளும் விளம்பர முதல்வராக ஸ்டாலின் நிற்கிறார். விளம்பரமேனியா என்ற நோய் முதல்வருக்கு வந்திருக்கிறது. அவரது குடும்பமே கதை திரைக்கதை எழுதும் குடும்பமாக இருப்பதே இதற்கு காரணம்' என அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
