Kathir News
Begin typing your search above and press return to search.

அர்ஜுன் சம்பத் வெளியில் நடமாட முடியாது - மிரட்டல் விடுக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி

'அர்ஜுன் சம்பத் நாட்டுல நடமாட முடியாது என விடுதலை சிறுத்தைகள் நிர்வாகி ஒருவர் மிரட்டி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அர்ஜுன் சம்பத் வெளியில் நடமாட முடியாது - மிரட்டல் விடுக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி
X

Mohan RajBy : Mohan Raj

  |  8 July 2022 6:29 PM IST

'அர்ஜுன் சம்பத் நாட்டுல நடமாட முடியாது என விடுதலை சிறுத்தைகள் நிர்வாகி ஒருவர் மிரட்டி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் U2 புரூட்டஸ் என்ற youtube சானலில் மைனர் விஜய் இந்து தெய்வமான நடராஜரை அவமதித்து இழிவாக பேசியதற்கு அவரை கைது செய்ய வேண்டும் என்ற போராட்டத்தில் அர்ஜுன் சம்பத் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், 'திருமாவளவன் போன்ற நபர்கள் அந்த u2 புரூட்ஸ் மைனர் விஜய் நபர்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறார்கள். வெளிநாட்டில் பணத்தை வாங்கிக் கொண்டு தினந்தோறும் இந்து கடவுளை இழிவுபடுத்துபுரம் திருமாவளவன் ஒரு அயோக்கியன். அவரால் தலித் இளைஞர்கள் ஏராளமான ஒரு சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர் சமூகத்தில் சாதி மதங்களை தூண்டி வருகிறார்' என பேசினார்.

அர்ஜுன் சம்பத்தின் இந்த பேச்சு சமூக வலைதளத்தில் வைரலானதை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அயோக்கியன் என பேசிய அர்ஜுன் சம்பத் அவர்களுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர் ஒருவர் அர்ஜூன்சம்பத் அவர்களை தொலைபேசி வாயிலாக எச்சரிக்கை செய்த ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் எங்கள் தலைவரை பார்த்து அயோக்கியன் பேசினீர்கள் அதற்கு நீங்கள் உடனே மன்னிப்பு கேட்க வேண்டும். இந்து மதம் இந்து மதம் என்று பேசுகிறீர்கள். இந்து மதவென்றால் சங்கர மடத்தில் நீங்கள் ஜெயந்திரருக்கு இணையாக அமர முடியுமா அப்படி இல்லை என்றால் நீங்கள் இந்து என்றெல்லாம் பேசாதீர்கள், திருமாவளவினை பேசியதற்கு மன்னிப்பு அறிக்கை உடனே விடுங்கள் இல்லை என்றால் கடுமையான போராட்டத்தை நடத்தும் நீங்கள் வெளியில் நடமாட முடியாத சூழ்நிலை உருவாகும்' என எச்சரித்துள்ளார்.


Source - Asinet News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News