Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியாவின் மெஜாரிட்டி மக்களாக கிறிஸ்தவர்கள் வருவோம்: நாங்கள் களப்பணிக்கு தயாராகிட்டோம்! பாதிரியாரின் ஆணவப் பேச்சு!

இந்தியாவின் மெஜாரிட்டி மக்களாக கிறிஸ்தவர்கள் வருவோம்: நாங்கள் களப்பணிக்கு தயாராகிட்டோம்! பாதிரியாரின் ஆணவப் பேச்சு!
X

ThangaveluBy : Thangavelu

  |  16 Feb 2022 10:18 AM

இந்தியாவில் பெரும்பான்மை மக்களாக கிறிஸ்தவர்கள் வருவோம் அதற்கான களப்பணிகளை மேற்கொள்வோம் என்று பாதிரியார் ஒருவர் பேசிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி வெளியான வீடியோவில் கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் பேசியதாவது: கிறிஸ்தவர்களை அர்ப்பமாக எண்ணுகின்ற பிரதமர் மோடிக்கு எச்சரிக்கை செய்கிறேன். கிறிஸ்தவர்கள் களப்பணிக்கு இறங்கிவிட்டோம், அதனின் மாபெரும் அடையாளம்தான் இந்த கிறிஸ்த நல்லெண்ண மாநாடு. ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.

கிறிஸ்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும். அரசியலை தீர்மானிக்கின்ற சக்தியாக வருகின்ற தேர்தலில் கிறிஸ்தவர்கள் முடிவு செய்ய வேண்டும். அதற்காக அண்ணன் இனிகோ இருதயராஜ் போன்றவர்களை ஆட்சிக்கட்டிலில் அமர்த்த வேண்டும். விரைவில் இந்தியாவில் கிறிஸ்தவர்கள் மெஜாரிட்டியாக வருவோம். நாங்கள் மைனாரிட்டி கிடையாது. இதற்கான களப்பளிகளை தொடங்கிவிட்டோம் என்றார்.

திமுக எம்.எல்.ஏ.வாக இருப்பவர் இனிகோ இருதயராஜ். இவர் சமீபத்தில் மதமாற்றத்தில் உயிரிழக்க காரணமான விடுதி வார்டனை சிறையில் சால்வை அணிவித்து வரவேற்றவர் ஆவார். பாதிரியார் சொல்வதை பார்த்தால் திமுக மறைமுகமாக மதமாற்றும் செயலுக்கு ஊக்கப்படுத்துகிறதோ என்ற எண்ணம் அனைத்து இந்துக்கள் மத்தியிலும் எழுந்துள்ளது.

Source, Image Courtesy: Twiter

Next Story
கதிர் தொகுப்பு
Trending News