ஆந்திர முதலமைச்சர் ஜெகனின் சகோதரி தெலங்கானாவில் புதிய கட்சி துவக்கம்.!
ஆந்திர முதலமைச்சர் ஜெகனின் சகோதரி தெலங்கானாவில் புதிய கட்சி துவக்கம்.!
By : Kathir Webdesk
ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியுடன் கருத்து வேறுபாடு காரணமாக அவரது சகோதரி ஷர்மிளா தெலங்கானா மாநிலத்தில் புதிய அரசியல் கட்சி தொடங்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆந்திராவில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஜெகன் மோகனின் தந்தை ராஜசேகர ரெட்டி ஆந்திராவின் ஒருங்கிணைந்த மாநிலத்தின் காங்கிரஸ் முன்னாள் முதலமைச்சராக இருந்தார். இதன் பின்னர் ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் இறந்து போனார். இதனையடுத்து சில காலம் காங்கிரஸில் இருந்த ஜெகன்மோகன் ரெட்டி கருத்து வேறுபாடு காரணமாக தனிக்கட்சி தொடங்கினார்.
அவர் தனிக்கட்சி தொடங்கும்போது ஜெகன்மோகன் கைது செய்ப்பட்டார். இதனையடுத்து அவரது அவரது சகோதரி ஷர்மிளா 47, மாநிலம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டார். இது ஆந்திராவில் புதிய திருப்பத்தை உருவாக்கியது. அதே போன்று கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஜெகன்மோகனுக்காக சகோதரி தீவிர பிரச்சாரத்தை முன்னெடுத்தார். இதனால் மக்கள் மனதில் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போன்று ஜெகன்மோகன் ரெட்டி அமோக வெற்றி பெற்று முதலமைச்சராக பதவியேற்றார்.
இந்நிலையில், முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கும், அவரது சகோதரி ஷர்மிளாவுக்கும் அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஷர்மிளாவை ஓரம் கட்ட ஜெகன் குடும்பத்தார் திட்டமிட்டு வருகின்றனர். இதனையடுத்து ஷர்மிளா மற்றும் அவரது தந்தை ராஜசேகர ரெட்டி படம் அடங்கிய போஸ்டர் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு வருகிறது.
இந்த போஸ்டர் ஆந்திர அரசியலில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.விரைவில் தெலங்கானா மாநிலத்தில் புதிய கட்சி தொடங்கப்படலாம் என கூறப்படுகிறது. இதற்காக ஐதராபாத்தில் உள்ள தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஷர்மிளா ஆலோசனையும் நடத்தி வருகிறாராம். விரைவில் புதிய கட்சி தொடங்குவதற்கான பணிகளும் நடைபெறும் என அவரது ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.