Kathir News
Begin typing your search above and press return to search.

மஞ்சப்பையை வைத்து ரூ.130 கோடி கமிஷன் பார்த்த தி.மு.க.! அண்ணாமலை பரபரப்பு தகவல்!

திமுக அரசு தரமற்ற முறையில் பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கியது. அதில் மஞ்சப்பையை அதிகமான விலைக்கு வாங்கி 130 கோடி ரூபாய் அளவில் ஊழல் செய்திருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மஞ்சப்பையை வைத்து ரூ.130 கோடி கமிஷன் பார்த்த தி.மு.க.! அண்ணாமலை பரபரப்பு தகவல்!

ThangaveluBy : Thangavelu

  |  2022-02-16T22:49:49+05:30

திமுக அரசு தரமற்ற முறையில் பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கியது. அதில் மஞ்சப்பையை அதிகமான விலைக்கு வாங்கி 130 கோடி ரூபாய் அளவில் ஊழல் செய்திருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

சென்னையில் நடைபெறும் மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு ராயப்பேட்டையில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் அங்கு பேசும்போது, மத்திய, மாநில அரசுகளுக்கு இடையில் முதலமைச்சர் ஸ்டாலின் பிரச்சனையை தூண்டி விடுகிறார். அதாவது பொங்கல் பரிசுத்தொகுப்பில் வழங்கப்பட்ட மஞ்சப்பை 10 ரூபாய் வாங்க வேண்டியதை ரூ.60க்கு வாங்கியுள்ளனர்.

இதன் மூலம் 2.15 கோடி மஞ்சப்பைக்கு ரூ.130 கோடி கமிஷனாக பெற்றுள்ளனர். மக்களுக்கான ஆட்சியாக இந்த திமுக அரசு செயல்படவில்லை. சென்னை கோட்டை என திமுக சொல்லிக்கொண்டிருக்கும் நிலையில் நாங்கள் தற்போது அதில் ஓட்டை போட்டுக் கொண்டிருக்கிறோம். வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Source,Image Courtesy: Puthiyathalaimurai


Next Story