Kathir News
Begin typing your search above and press return to search.

இன்னும் ஏன் பொய் பேசிட்டு இருக்கீங்க ! - தி.மு.க'வை வறுத்தெடுத்த அண்ணாமலை !

Breaking News.

இன்னும் ஏன் பொய் பேசிட்டு இருக்கீங்க ! - தி.மு.கவை வறுத்தெடுத்த அண்ணாமலை !
X

Mohan RajBy : Mohan Raj

  |  20 Sept 2021 10:33 PM IST

"இன்னும் எதற்காக பொய் பேசிக் கொண்டிருக்கின்றனர்? எந்தவிதத்தில் பார்த்தாலும் நீட் தேர்வு சமூகநீதியை நிலைநாட்டும். திமுக இதைவைத்து அரசியல் செய்கிறது" என கோவையில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.

கோவை மாவட்டத்தில் நடந்த பல நிகழ்ச்சிகளில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். இதையடுத்து, காந்திபுரம் பகுதியிலுள்ள பா.ஜ.க அலுவலகத்தில் மாற்றுக் கட்சியினர் இணையும் நிகழ்ச்சி நடந்தது அப்போது கடந்த சட்டசபைத் தேர்தலில் தொண்டாமுத்தூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்ட ஷாஜஹான் உள்ளிட்ட பலர் அண்ணாமலை முன்பு பா.ஜ.க'வில் இணைந்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது, "நீட் தேர்வுக்காக மாணவர்கள் உயிரிழக்கும்போது சமுதாயத்தில் தவறான அபிப்ராயத்தை விதைக்கிறது. உயிரிழக்கும் மாணவர்களின் துயரத்தில் நாங்களும் இருக்கிறோம். 2019, 2020-ம் ஆண்டு நீட் தேர்வுக்காக யாரும் தற்கொலை செய்யவில்லை. 2021-ம் ஆண்டு மாணவர்கள் எதற்காகத் தற்கொலை செய்துள்ளனர்? `நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் சட்டசபை கூட்டத்தொடரிலேயே நீட் தேர்வை எடுத்துவிடுவோம். மாணவர்கள் எதற்காகவும் கவலைப்பட வேண்டாம். தேர்வு நடக்காது. படிக்க வேண்டாம்' என தி.மு.க தலைவர்கள் பல இடங்களில் பேசியிருக்கிறார்கள்.

பொறுப்பான தலைவர்கள் பேச்சும் பேச்சசா இது... இன்னும் எதற்காக பொய் பேசிக் கொண்டிருக்கின்றனர்? எந்தவிதத்தில் பார்த்தாலும் நீட் தேர்வு சமூகநீதியை நிலைநாட்டும். தி.மு.க இதைவைத்து அரசியல் செய்கிறது" என கூறினார்.


Source - Junior Vikatan

Next Story
கதிர் தொகுப்பு
Trending News