Kathir News
Begin typing your search above and press return to search.

தி.மு.க அமைச்சர்களின் ஊழலை ஜே.பி.நாட்டா'விடம் புட்டு புட்டு வைத்த அண்ணாமலை - 'லெட்ஸ் பிகின்' என்ற ஜே.பி.நாட்டா | துவங்கும் ஆட்டம்

நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தேசிய தலைவர் நட்டா நேற்று முன்தினம் நள்ளிரவு வரை ஆலோசனை நடத்தியது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளிவந்துள்ளன.

தி.மு.க அமைச்சர்களின் ஊழலை ஜே.பி.நாட்டாவிடம் புட்டு புட்டு வைத்த அண்ணாமலை - லெட்ஸ் பிகின் என்ற ஜே.பி.நாட்டா | துவங்கும் ஆட்டம்

Mohan RajBy : Mohan Raj

  |  29 Dec 2022 8:12 AM GMT

நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தேசிய தலைவர் நட்டா நேற்று முன்தினம் நள்ளிரவு வரை ஆலோசனை நடத்தியது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளிவந்துள்ளன.

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பா.ஜ.க தேசிய தலைவர் நட்டா நேற்று முன்தினம் மதியம் கோவை வந்தார். கோவை நீலகிரி மாவட்ட நிர்வாகிகள், சமூக ஊடகங்களில் பாரத ஜனதா கட்சிக்கு ஆதரவாக செயல்படுபவர்களை சந்தித்து உரையாடினார்.

இரவு பொதுக்கூட்டம் முடிந்ததும் கோவை அருகே உள்ள ஈஷா யோகா மையத்தில் நட்டா தங்கினார். தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பா.ஜ.க மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலர் அங்கு அவருடன் தங்கினார்கள்.

அப்போது அண்ணாமலை உள்ளிட்ட தமிழக பா.ஜ.க முக்கிய நிர்வாகிகளிடம் தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஜே.பி.நட்டா கேட்டறிந்தார். மேலும் அவர் லோக்சபா தேர்தல் தொடர்பாக நள்ளிரவு வரை ஆலோசனை நடத்தியுள்ளார்.

மேலும் வரும் தேர்தல்களில் பணியாற்றுவது பூத் கமிட்டி மெம்பர்கள் குறித்த விளக்கங்கள் அனைத்தையும் ஜே.பி.நட்டா அறிவுறுத்தியுள்ளார். தமிழக பாஜக நிர்வாகிகள் தமிழக அரசியல் கள நிறுவனத்தை நட்டாவிடம் கூறியதையும் பொறுமையாக அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் அவர் தி.மு.க'வின் ஆட்சியால் நாட்டில் நடக்கும் அவலங்களை மக்களிடத்தில் கொண்டு செல்லுங்கள்.

பா.ம.க, தே.மு.தி.க போன்ற கட்சிகளை கூட்டணியில் இணைக்க வையுங்கள். தமிழகத்தில் பா.ஜ.க போட்டியிடும் தொகுதிகளையும் அதற்கான வலுவான வேட்பாளர்களையும் இப்பொழுது அடையாளம் கண்டு அவர்களுக்கு அனைத்து தொகுதிகளிலும் ஓட்டு சாவடி கமிட்டி அமைத்து தேர்தல் பணிகளை துவங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தி.மு.க அமைச்சர்கள் மீது நிலுவையில் உள்ள ஊழல் வழக்குகள் தி.மு.க அரசின் செயல்பாடுகள் குறித்து நட்டா'விடம் அண்ணாமலை எடுத்துக் கூறியுள்ளதாக கூடுதல் தகவல்களும் கிடைத்துள்ளன. இதன் காரணமாகத்தான் நேற்று தி.மு.க'வின் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், 'பா.ஜ.க'வினர் எதையும் செய்ய தயங்க மாட்டார்கள் எனவே பா.ஜ.க'வை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்' என கூறியது குறிப்பிடத்தக்கது.


Source - Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News