"ஏன் காங்கிரஸ் என ஒரு கட்சியை நடத்துறீங்க ? கலைத்து விட்டு தி.மு.க. உடன் சேர்த்துடுங்க"- காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை !
By : Dhivakar
தமிழக காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருப்பவர் " உடனடியாக உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்குங்கள்" என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். இது தமிழக காங்கிரஸ் கட்சியை அனைவரையும் கேலி செய்யும் நிலைக்கு தள்ளியுள்ளது.
மத்தியில் 2014ல் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சி பொறுப்பேற்றது முதல், காங்கிரஸ் கட்சி தேசிய அளவிலும் பல மாநில அரசியலிலும் கரைந்துகொண்டு வருகிறது. பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி கோட்டையாக இருந்த தருணங்கள் காலம் கடந்து விட்டது. இப்பொழுது காங்கிரஸ் கட்சி ஒரு சாதாரண கட்சியாக மாறிக்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் ஆறு மாதங்களுக்கு முன்பு திமுக ஆட்சி அமைந்தது,இந்நிலையில் காங்கிரஸின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான பீட்டர் அல்போன்ஸ் முரசொலி பத்திரிக்கையில் முதல்வர் மு.க ஸ்டாலின் பற்றி தி.மு.க ஆதரவாளர் போல் பாராட்டி பேசினார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் தமிழக காங்கிரஸ் விவசாய அணி பொதுச் செயலாளர் ஒருவர் "உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக அறிவிக்க வேண்டும் என முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்"
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இது குறித்து செய்தியாளர்களிடம் பேசியதாவது :
தமிழக காங்கிரஸ் விவசாயி அணியின் பொதுச் செயலளார் ஒருவர் உடனடியாக உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்குங்கள் என ஸ்டாலினுக்கு கடிதம் எழுதுகிறார். அப்போ, ஏன் காங்கிரஸ் என ஒரு கட்சியை நடத்துறீங்க. கலைத்து விட்டு தி.மு.க. உடன் சேர்த்துடுங்க.முரசொலியில் காங்கிரஸ் தலைவர் ஒருவர் இந்தியாவின் அடுத்த விடிவெள்ளி மு.க. ஸ்டாலின் என எழுதுகிறார். இதனால் ஏன் காங்கிரஸ்ன்னு ஒரு கட்சியை நடத்திகிட்டு.
நீங்களே ஸ்டாலினை விடிவெள்ளி என்றால், காங்கிரஸ்காரர்களே ராகுல் காந்தியை ஒரு தலைவராக ஏற்றுக் கொள்ளவில்லையா? என்றுதான் அழகிரியிடம் கேட்கிறோம். ஏற்றுக்கொண்டால் நடவடிக்கை எடுத்தீர்களா?. தமிழ்நாடு மட்டும் ரொம்ப விசித்திரம். தமிழ்நாடு காங்கிரஸ்க்கு காங்கிரஸ் என்ற தன்மையே கிடையாது. தி.மு.க.வின் ஒரு 'பி' டீம் ஆகத்தான் இருக்காங்க. இதில் என்ன தெரிகிறது என்றால், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி கிடையாது.'' என்றார்.