Kathir News
Begin typing your search above and press return to search.

லோக்சபா தேர்தலில் 25 தொகுதிகள் இலக்கு - அண்ணாமலையின் மாஸ்டர் திட்டம் என்ன?

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க தமிழகத்தில் 25 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கு அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.

லோக்சபா தேர்தலில் 25 தொகுதிகள் இலக்கு - அண்ணாமலையின் மாஸ்டர் திட்டம் என்ன?

Mohan RajBy : Mohan Raj

  |  12 May 2022 8:45 AM GMT

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க தமிழகத்தில் 25 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கு அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.


தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை புதிய நிர்வாகிகளை சமீபத்தில் நியமித்தார், அவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் மதுரையில் நேற்று முன்தினம் நடந்தது அதில் பங்கேற்ற 213 நிர்வாகிகள் மத்தியில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பேசினார்.

அப்போது பேசிய அவர் கூறியதாவது, 'லோக்சபா தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அனைத்து பகுதிகளிலும் புதிய நிர்வாகிகள் கட்சியை பலப்படுத்த வேண்டும். குறைந்தது 25 முதல் அதிக நபர்களை உறுப்பினர்களாக சேர்ப்பவர்களுக்கு கட்சி விதிப்படி பொறுப்பு வழங்கலாம். ஒவ்வொருவரும் தங்கள் பகுதியில் உள்ள 25 நபர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்க வேண்டும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும்.

தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் சமயத்தில் தான் மக்களிடம் செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர், ஆனால் பா.ஜ.க அப்படிப்பட்ட கட்சி அல்ல எனவே கட்சியினர் தினமும் மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் மத்திய அரசு ஏழைகளுக்கு வீடு, விவசாயிகளுக்கு நிதி உதவி என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளது அவற்றை தான் தமிழக அரசு செயல்படுத்துகிறது.


தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் மத்திய அரசின் திட்டங்கள் நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட விவரங்களை மக்களிடம் சேர்க்க வேண்டும், பிரதமர் மோடி நிறைய நாட்டு மக்களிடையே வானொலி உரையாற்றும் மனதின் குரல் நிகழ்ச்சியில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் செய்த சிறப்பான சேவை குறித்து பேசி வருகிறார். அந்நிகழ்ச்சியை மக்களிடம் பிரபலப்படுத்த வேண்டும் வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் 25 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டிய பணிகளை துவக்க வேண்டும்' என புதிய நிர்வாகிகளுக்கு ஊக்கம் அளித்துள்ளார் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை

Source - Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News