மக்களுக்காக காவிரி பிரச்சினையை கையில் எடுத்து போராடிய அண்ணாமலை மீது வழக்குபதிவு !
அண்ணாமலை மீது வழக்குபதிவு !
By : Mohan Raj
தஞ்சையில் நேற்று காவிரி பிரச்சினைக்காக போராடிய தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மீது வழக்கு போடப்பட்டுள்ளது.
மேகதாது அணையைக் கட்ட கர்நாடக அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு எதிராக தமிழக பா.ஜ.க தலைவர் தஞ்சையில் அண்ணாமலை உண்ணாவிரதம் மேற்கொண்டார். தஞ்சையில் போராட்டத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, துணை தலைவர் முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்ற்றுள்ளனர். மக்கள் மத்தியில் இந்த போராட்டத்திற்கு பெரும் ஆதரவு மற்றும் வரவேற்பு கிடைத்தது. மற்றும் போராட்டத்தின் நடுவில் தலைவர் அண்ணாமல் பேசியபோது தி.மு.க 1972 முதல் காவிரி பிரச்சினையை வைத்து அரசியல் செய்து கட்சியை வளர்த்தது குறித்தும், தி.மு.க'வின் குழும தனியார் சேனல்களான சட் குழுமம் உதயா தொலைக்காட்சி என்ற பெயரில் கர்நாடாகாவில் வியாபாரம் செய்து பணத்தை சம்பாதித்து வருவதாகவும் விமர்சித்து பேசினார்.
இதனையடுத்து கர்நாடகாவை கண்டித்து நேற்று தஞ்சாவூரில் நடைபெற்ற உண்ணாவிரதத்திற்கு பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் சகிதம் மாட்டு வண்டியில் வந்ததால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.