Kathir News
Begin typing your search above and press return to search.

பா.ஜ.க'வினர் இரவு பயணத்தை தவிர்க்க வேண்டும் - அண்ணாமலை எச்சரிக்கையின் பின்னணி என்ன?

பா.ஜ.கவினர் இரவு பயணத்தை தவிர்க்க வேண்டும் - அண்ணாமலை எச்சரிக்கையின் பின்னணி என்ன?
X

ThangaveluBy : Thangavelu

  |  18 April 2022 7:19 PM IST

இந்தியா முழுவதும் குறிப்பிட்ட மாநிலங்களில் ஏற்படும் வன்முறைகளை தொடர்ந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை தடை செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு உளவுத்துறை பரிந்துரை செய்துள்ளது. விரைவில் இந்த அமைப்பு தடை செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. நாடு முழுவதும் இந்த விவாதங்கள் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

ஒரு வேளை அந்த அமைப்பு தடை செய்யப்படும் பட்சத்தில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என கூறப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாஜக நிர்வாகிகளுக்கும், இந்து அமைப்பை சேர்ந்தவர்களுக்கும் முக்கிய வேண்டுகோள் வைத்துள்ளார். வேலை பார்க்கின்ற இடங்களுக்கு செல்வது மற்றும் வெளியூர் செல்லும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் எனவும், குறிப்பாக இரவு நேர பயணத்தை தவிர்ப்பது நல்லது. கட்சி வேறு, அரசு வேறு, அரசு எவ்வித நடவடிக்கை வேண்டுமானாலும் எடுக்கலாம். எனவே கட்சியினர் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Source: Maalai Malar

Image Courtesy: Twiter

Next Story
கதிர் தொகுப்பு
Trending News