Kathir News
Begin typing your search above and press return to search.

முதலமைச்சரின் வீட்டை பா.ஜ.க தொண்டர்கள் முற்றியிடும் காலம் வெகும் தொலைவில் இல்லை - அண்ணாமலை

நாடாளுமன்ற தேர்தல் உடன், தமிழக சட்டமன்றத்திற்கு தேர்தல் வந்தால் நாங்கள் பொறுப்பல்ல அண்ணாமலை பரபரப்பு தகவல்.

முதலமைச்சரின் வீட்டை பா.ஜ.க தொண்டர்கள் முற்றியிடும் காலம் வெகும் தொலைவில் இல்லை - அண்ணாமலை
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  27 Sep 2022 1:21 PM GMT

பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தி.மு.க அரசை கண்டித்தும் பா.ஜ.க சார்பில் கோவையில் சிவானந்தா காலனியில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட பொது செயலாளர் ஆன பிரீத்தி லட்சுமி வரவேற்றார். மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கி பேசும் பொழுது குறிப்பிடுகையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் முதலமைச்சராக வருவதற்காக 10 ஆண்டுகாலம் காத்திருந்தார். இவ்வாறு அவர் பதவியேற்று முதல் நாளிலிருந்து வாக்கு செலுத்தியவர்களுக்கும், வாக்கு செலுத்தாதவர்களுக்கும் முதலமைச்சர் ஆக இருப்பேன் என்று கூறினார்.


ஆனால் தமிழகத்தில் கலவரத்தை யார் செய்தார்களோ? அவர்கள் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இந்து மக்களை இழிவாக பேசிய ஆ. ராசா மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழகத்தில் 20 ஆண்டுகாலம் முன்பு இதுபோன்று பேசிய பொழுது பெரிதும் மக்கள் கண்டனம் தெரிவிக்கவில்லை. தற்போது அரசியல் களம் மாறி இருக்கிறது. நாங்கள் தான் சுயமரியாதைக்காரர்கள், பொருத்தமான வார்த்தையை சமூக நீதி, சுயமரியாதை. ஆனால் பா.ஜ.க மதவாத கட்சி என்றும் ஏதாவது சொல்லி ஆட்சிக்கு வர பார்க்கிறார்கள் என்றும் முதலமைச்சர் அவர்கள் அறிக்கை விடுகிறார். தமிழகத்தின் 110 கோடி பேர் மதுவிற்கு அடிமையாகி இருப்பதிலிருந்து வெளிக்கொண்டு வரவும், அரசு அலுவலகங்களில் லஞ்சம் கனிமகளுக்கு கொள்கைகளை தடுக்கவே நாங்கள் ஆட்சிக்கு வர நினைக்கிறோம் என்று பல்வேறு பொய்களை அடுக்கி விடுகிறார்கள்.


2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் ஓடு, தமிழக சட்டமன்றத்திலும் தேர்தல் வந்தால் நாங்கள் பொறுப்பல்ல. நீங்கள் மாற்றிக்கொள்ள வில்லை என்றால், மாற்றப்படுவீர்கள். முதலமைச்சரின் வீட்டை பா.ஜ.க தொண்டர்கள் முற்றியிடும் காலம் வெகும் தொலைவில் இல்லை. எங்களை தாண்டி தான் கோட்டைக்கு செல்ல வேண்டும். முதலமைச்சர் நடுநிலைமையோடு நடந்து கொள்ள வேண்டும். நடுநிலையாக இருந்து ஐந்து ஆண்டுகளிலும் முழுமையாக ஆட்சி செய்ய முயற்சி செய்யுங்கள் என்று பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் கூறியிருக்கிறார். தமிழக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள் பாஜகவை சார்ந்த தொண்டர்கள்.

Input & Image courtesy: Express News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News