Kathir News
Begin typing your search above and press return to search.

"மாணவர்களே பொய்யான பரப்புரையை நம்பி உங்கள் உயிரை இழக்காதீர்கள் ! " - அண்ணாமலை உருக்கம் !

Breaking News.

மாணவர்களே பொய்யான பரப்புரையை நம்பி உங்கள் உயிரை இழக்காதீர்கள் !  - அண்ணாமலை உருக்கம் !
X

Mohan RajBy : Mohan Raj

  |  15 Sep 2021 3:30 PM GMT

"தற்கொலைக்குத் தூண்டும் சில பொய்யான பரப்புரையை நம்பி விலைமதிப்பற்ற உங்கள் உயிரை இழக்காதீர்கள்" என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக இத்துடன் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தமிழகத்தில் பல அரசியல் தலைவர்கள் அந்த விவகாரத்தை வைத்து அரசியல் செய்ய தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மாணவர்களுக்கு ஊக்கமளித்துள்ளார்.

இன்றைய அவரது ட்விட்டர் பதிவில் இது பற்றி குறிப்பிட்ட அவர், " வறுமையை கண்டு பயந்து விடாதே... திறமை இருக்கு மறந்து விடாதே... என்று புரட்சித்தலைவர் பாடியது. மாணவர்களாகிய உங்களுக்குத்தான். விடா முயற்சியும் திறமையும் இருந்தால் பணமில்லாத ஏழைக்கும் வெற்றி நிச்சயம். உங்கள் கனவுகளை விரிவாக்குங்கள். மருத்துவ படிப்பு என்ன? மருத்துவக் கல்லூரி கட்ட, பெரிய மருத்துவமனை கட்ட என்று இன்னும் எத்தனை எத்தனை வாய்ப்புகள் நமக்காகக் காத்திருக்கின்றன. தற்கொலைக்குத் தூண்டும் சில பொய்யான பரப்புரையை நம்பி விலைமதிப்பற்ற உங்கள் உயிரை இழக்காதீர்கள். பிணத்தின் மீது விழும் மாலையால் பெருமை என்ன?

தமிழக மாணவச் செல்வங்களே மாபெரும் சபைகளில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும்... அந்த மாலைகள் உனக்கு வெற்றி மாலைகள் ஆகட்டும். படிப்பின் மீது பிடிப்போடு இருங்கள். உங்கள் அறிவுக்கும் திறமைக்கும் ஈடுபாட்டுக்கும் முயற்சிக்கும்,பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு இருங்கள்'' என அவர் தெரிவித்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News