அரசியலில் எதுவும் நடக்கலாம்.. வாய்ப்பு இருந்தால் ரஜினியுடன் கூட்டணி.. துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ்., அதிரடி பேட்டி.!
அரசியலில் எதுவும் நடக்கலாம்.. வாய்ப்பு இருந்தால் ரஜினியுடன் கூட்டணி.. துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ்., அதிரடி பேட்டி.!
By : Kathir Webdesk
நடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சியை ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படும் என இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அவர் அறிவிப்பு வெளியிட்ட பின்னர் இருந்து தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
கடந்த ஒரு மாதம் காலமாக ரஜினி தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் ஆலோசனை மற்றும் கருத்து கேட்பு என நடத்தி வந்தார். இதனால் விரைவில் கட்சி ஆரம்பிப்பார் என்று பலரும் பேசி வந்தனர். இன்று தனது அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படையாகவே அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டு நடைபெறுகின்ற சட்டப்பேரவை தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் வெற்றியும் பெறும் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், ரஜினி அரசியல் நுழைவு குறித்த அறிவிப்பு குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் அளித்துள்ள பேட்டியில், ரஜினி சிறந்த நடிகர். அவர் கட்சி தொடங்குவதை வரவேற்கிறேன். அரசியலில் எதுவும் நடக்கலாம். வாய்ப்பு இருந்தால் ரஜினியுடன் கூட்டணி அமைக்கப்படும் என்று கூறியுள்ளார்.
மேலும், சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ரஜினி கூறிய கருத்துக்களை கேட்டு விட்டு பின்னர் பதில் அளிக்கிறேன் என்று தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.