Kathir News
Begin typing your search above and press return to search.

சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக இருக்கும் பா.ஜ.க திட்டங்கள் - பேராயர் குணசேகரன்!

சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக இருக்கும் பல்வேறு திட்டங்கள் கைவசம் உள்ளது தான் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி.

சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக இருக்கும் பா.ஜ.க திட்டங்கள் - பேராயர் குணசேகரன்!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  11 Oct 2022 2:17 AM GMT

பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியின் கீழ் இந்தியாவில் உள்ள பல்வேறு சிறுபான்மை மக்களுக்கும் சிறப்பான திட்டங்கள் கிடைத்துக் கொண்டு இருக்கின்றன. ஆனால் எதிர்க்கட்சிகள் செய்யும் பெரும் சூழ்ச்சியின் காரணமாக, இத்தகைய திட்டங்கள் மக்களுக்கு இருப்பது கூட தெரியாது. அந்த அளவிற்கு அவர்களை ஏமாற்றி வைத்திருக்கிறார்கள். இது பற்றி பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பிறந்த நாளின் போது பிரதமருக்கு வாழ்த்து கூறி பி.ஜே.பி பற்றிய அவருடைய மனநிலையை வெளிப்படுத்தியிருக்கிறார் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த பேராயர் குணசேகரன் அவர்கள்.



பேராயர் குணசேகரன் அவர்களின் வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. ஏனெனில், இதைப் பற்றி அவர் அழகாக எடுத்து கூறும் பொழுது சிறு வயதில் குழந்தைகள் யானைகளை வைத்து பயமுறுகிறார்கள். ஆனால் உண்மையில் யானை அமைதியானது. அதன் குணமும் மனிதர்களுக்கு இயற்கையாகவே நண்பனாக உதவி செய்யும் குணம் தான். அதேபோல மாநிலத்தில் பி.ஜே.பி ஆட்சி வந்தால் பல்வேறு தரப்பினரும் பயன் பெற்று வருகிறார்கள். உண்மையில் அவர்கள் சிறுபான்மை மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை வகுத்திருக்கிறார்கள். இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.


உண்மையான மாநில அரசு என்றால் அதுவும் மக்களுக்காக பாடுபடும் மாநில அரசு பி.ஜே.பியின் இத்தகைய சிறுபான்மை திட்டங்கள் ஏற்றுக்கொண்டு மாநில மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்ய வேண்டும். இல்லை என்றால் இத்தகைய அரசு எங்களுக்கு ஏன் தேவை? BJP எங்களை ஆட்சி செய்யலாம் என்று அவர் தன்னுடைய கருத்தை அழகாக எடுத்துக் கூறியிருக்கிறார். இவருடைய இந்த ஒரு வீடியோ பதிவுதான் தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. சிறுபான்மையினருக்காக மத்திய அரசு பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதுபோன்ற திட்டங்களை மாநில அரசு செயல்படுத்த வேண்டும். எளிய பின்னணியில் இருந்து உயர்ந்து வந்த பிரதமர் மோடிக்கு ஏழைகளின் நிலை தெரியும் என்று பேராயர் குணசேகரன் கூறியிருக்கிறார்.

Input & Image courtesy: Twitter Source

Next Story
கதிர் தொகுப்பு
Trending News