Kathir News
Begin typing your search above and press return to search.

வீட்ல தெலுங்கு பேசிட்டு வெளில தமிழ் நாடகம் போடும் நீங்கள் என்னை விமர்சிப்பதா - சீரும் தமிழிசை சவுந்தர்ராஜன்

'தெலுங்கை பூர்வீகமாகக் கொண்டு வீட்டில் தெலுங்கு பேசி தமிழர் வேடம் போடும் தெலுங்கர்களுக்கு தமிழ் ரத்தம் ஓடும் தமிழச்சி நான் என்பதை ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை' என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

வீட்ல தெலுங்கு பேசிட்டு வெளில தமிழ் நாடகம் போடும் நீங்கள் என்னை விமர்சிப்பதா - சீரும் தமிழிசை சவுந்தர்ராஜன்
X

Mohan RajBy : Mohan Raj

  |  6 Nov 2022 4:47 PM IST

'தெலுங்கை பூர்வீகமாகக் கொண்டு வீட்டில் தெலுங்கு பேசி தமிழர் வேடம் போடும் தெலுங்கர்களுக்கு தமிழ் ரத்தம் ஓடும் தமிழச்சி நான் என்பதை ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை' என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

நேற்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செயல்பாடுகள் குறித்து முரசொலி சிலந்தி கட்டுரையில் விமர்சனம் செய்யப்பட்டிருந்தது. சிலருக்கு மைக் மேனியா இருக்கிறது எனவும் தெலுங்கானாவில் ஜம்பம் பலிக்காததால் தமிழ்நாடு பற்றி தமிழிசை கருத்து கூறி வருகிறார் எனவும் விமர்சிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இதற்கு தமிழிசை சௌந்தர்ராஜன் பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, தி.மு.க தங்களை எரிமலை என சொல்லிக் கொள்கிறது எரிமலைகள் இமய மலைகளை ஒன்றும் செய்துவிட முடியாது. மேலும் சிலந்தி வேடமிட்டு வரும் மூட்டை பூச்சிகளின் சாயம் வெளுக்கிறது. எதைக் கண்டாலும் தினம் அஞ்சும் தெனாலி திரைப்பட கதாநாயகன் போல் அஞ்சு அஞ்சி ஆளுநரை பற்றி அடிக்கடி எழுதுகிறீர்கள் உண்மையை உரக்கச் சொல்லும் எங்களுக்கு மைக் மேனியாவும் இல்லை, கேமரா மேனியாவும் இல்லை.

தெலுங்கை பூர்வீகமாக கொண்டு வீட்டில் தெலுங்கு பேசி தமிழ் வேடம் போடும் தெலுங்கர்களுக்கு தெலுங்கானாவின் ஆளுநராக இருந்தாலும் தெலுங்கானா சட்டமன்றத்தில் திருக்குறளை தமிழில் ஒலிக்கச் செய்த முழுமையான தமிழ் ரத்த ஓடும் தமிழச்சி நான் என்பதை உங்களால் ஜீரணித்து கொள்ள முடியவில்லை. நீங்கள் யார் என்னை தமிழகத்தில் கருத்து கூற முடியாது என கூறுவதற்கு? அன்னியர் நீங்களா? நானா? என ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளார்.

Source - News 18 Tamil Nadu

Next Story
கதிர் தொகுப்பு
Trending News