Kathir News
Begin typing your search above and press return to search.

'கோவிலை விட்டு வெளியேறுறீங்களா, இல்லை வழக்கு போடவா?' - முதல்வர் ஸ்டாலினுக்கு எச்சரிக்கை கடிதம் எழுதிய சுப்பிரமணியன் சுவாமி

அரசு கட்டுப்பாட்டில் இருந்து கோயில்களை விடுவிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு முன்னாள் எம்.பி சுப்பிரமணியசாமி வலியுறுத்தியுள்ளார்.

கோவிலை விட்டு வெளியேறுறீங்களா, இல்லை வழக்கு போடவா? - முதல்வர் ஸ்டாலினுக்கு எச்சரிக்கை கடிதம் எழுதிய சுப்பிரமணியன் சுவாமி

Mohan RajBy : Mohan Raj

  |  2 Dec 2022 3:00 AM GMT

அரசு கட்டுப்பாட்டில் இருந்து கோயில்களை விடுவிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு முன்னாள் எம்.பி சுப்பிரமணியசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக முதல்வருக்கு சுப்பிரமணியன் சுவாமி அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, 'தமிழகத்தில் உள்ள இந்து கோவில்கள் மற்றும் நிறுவனங்களை பல்லாண்டுகளாக அரசு இந்து சமய மற்றும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 25 மற்றும் 26வது பிரிவுகளுக்கு எதிரானது. உச்சநீதிமன்றத்தில் நான் தொடர்ந்த வழக்கு ஒன்றில் தமிழக அரசு எதிர் மனுதாரராக இருந்து அந்த வழக்கின் தீர்ப்பு கடந்த 2014 ஆம் ஆண்டு வெளிவந்தது.

அதில், கோவில்களில் மதம் சார்ந்த விழாக்களை அரசு நடத்தக்கூடாது, கோவில்களில் ஏதேனும் நிதி சார்ந்த முறைகேடுகள், நிதி சார்ந்த சிக்கல் இருப்பின் அவற்றை தீர்ப்புக்கான குறிப்பிட்ட கால அளவு வரை அரசு கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளலாம்' என கூறப்பட்டுள்ளது. அதன்படி உச்சநீதிமன்ற உத்தரவை மதித்து மாநில அரசு கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து இந்து கோவில்களையும், நிறுவனங்களையும் விடுவிக்க வேண்டும். தவறினால் தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டும் என அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.


Source - The Tamil Hindu

Next Story
கதிர் தொகுப்பு
Trending News