Kathir News
Begin typing your search above and press return to search.

'இப்ப உங்களுக்கு ரத்தம் கொதிக்கவில்லையா முதல்வரே?' - வீராங்கனை பிரியா இறந்த விவகாரத்தில் கேள்விகளை அடுக்கும் பா.ஜ.க, விழிக்கும் தி.மு.க

தமிழக பா.ஜ.க துணை தலைவர் நாராயணன் திருப்பதி, தி.மு.க ஆட்சியை பற்றிய கடுமையாக விமர்சித்துள்ளார்.

இப்ப உங்களுக்கு ரத்தம் கொதிக்கவில்லையா முதல்வரே? - வீராங்கனை பிரியா இறந்த விவகாரத்தில் கேள்விகளை அடுக்கும் பா.ஜ.க, விழிக்கும் தி.மு.க
X

Mohan RajBy : Mohan Raj

  |  16 Nov 2022 9:10 AM IST

தமிழக பா.ஜ.க துணை தலைவர் நாராயணன் திருப்பதி, தி.மு.க ஆட்சியை பற்றிய கடுமையாக விமர்சித்துள்ளார்.

தமிழக பா.ஜ.க துணை தலைவர் நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் பதிவில் முதல்வர் ஸ்டாலினை விமர்சித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் கொளத்தூர் தொகுதியில் உள்ள பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் பிரியா என்ற மாணவி தவறான சிகிச்சையில் அந்த உயிர் பிரிந்து விட்டது ஆனால் இது குறித்து முதல்வர் ஏதும் கருத்து தெரியாமல் இருக்கிறார் என்று கூறி முதல்வர் ஸ்டாலினின் பழைய பதிவை மேற்கோள் காட்டியுள்ளார்.

அந்த பதிவை மேற்கோள் காட்டி நாராயணன் திருப்பதி எழுப்பிய கேள்வியாக, 'இப்போது ரத்தம் கொதிக்கவில்லையா? ஸ்டாலின் அவர்களே இது ஊழல் அரசு என்பதையும் உங்கள் ஊழல் அரசின் கீழ் மருத்துவமனை எந்த லட்சணத்தில் விளங்குகிறது என்பதை விளக்க இதை விட உதாரணம் வேண்டியதில்லை என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா? என காட்டமாக பதிவிட்டுள்ளார்.


Source - Asianet News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News