Kathir News
Begin typing your search above and press return to search.

'வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் மோடி! வேண்டும் மோடி!' - சுற்றுப்பயணம் கிளம்பிய அர்ஜுன் சம்பத்

'2026ல் மீண்டும் மோடி வேண்டும் மோடி' என தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் கிளம்பியுள்ளார் அர்ஜுன் சம்பத்.

வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் மோடி! வேண்டும் மோடி! - சுற்றுப்பயணம் கிளம்பிய அர்ஜுன் சம்பத்

Mohan RajBy : Mohan Raj

  |  17 July 2022 10:01 AM GMT

'2026ல் மீண்டும் மோடி வேண்டும் மோடி' என தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் கிளம்பியுள்ளார் அர்ஜுன் சம்பத்.

75வது சுதந்திர இந்தியா பவள விழா பல்வேறு மாநிலங்களில் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது இந்நிலையில் இந்து மக்கள் கட்சி சார்பில் 75 வது சுதந்திர விழாவை ஒட்டி 'சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களை போற்றுவோம், சுதந்திரப் போராட்ட நினைவிடங்களில் வீரவளக்கம் செலுத்துவோம்' என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்ட வீரர்கள் மற்றும் அவரது நினைவிடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுவருகிறார்.

இந்நிலையில் தர்மபுரி அண்ணா சாகரத்தில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி சிவகாமி அம்மாவை அவரது இல்லத்தில் சந்தித்து மலர்களால் பாத பூஜை செய்து வணங்கினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அர்ஜுன் சம்பத், '75வது சுதந்திர இந்தியா பவள விழாவை பல்வேறு மாநிலங்களில் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது எனவே தமிழ்நாடு அரசு இந்த சுதந்திர இந்தியா பவள விழாவினை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என முதலமைச்சருக்கு கோரிக்கை விடுக்கிறேன்' என்றார்.

மேலும், 'தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பள்ளி மாணவர்களுக்கு வழங்கக்கூடிய கணினி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்று வந்தவுடன் செயல்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால் அதை முதலமைச்சரே ஏற்றுக்கொள்ள மாட்டார் ஏனென்றால் அவர் மருத்துவமனையில் இருந்தாலும் கூட இங்கே வேலை நடைபெற வேண்டும் என்று தான் எண்ணுவார் மாணவர்களுக்கு வழங்கக்கூடிய கணினி உள்ளிட்டவற்றை முதலமைச்சராக காத்திருக்காமல் உடனடியாக வழங்க வேண்டும்' என வலியுறுத்தினார்.


மேலும், 'வருகிற 2026 நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் மோடி வேண்டும் மோடி வளமான தமிழகத்தில் தமிழகத்தின் மோடி ஆதரவாளர்கள் வெற்றி பெறுவார்கள் நாளும் நமதே நாற்பதும் நமதே' என கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News