Begin typing your search above and press return to search.
மத்திய அரசு மீது தி.மு.க பழிபோடுவதை கண்டிக்கிறோம் - அர்ஜுன் சம்பத் காட்டம்!
தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி விநாயகர் சதுர்த்தி விழாக்களை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் பேட்டியில் கூறியுள்ளார்.

By :
தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி விநாயகர் சதுர்த்தி விழாக்களை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் பேட்டியில் கூறியுள்ளார்.
இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் பேசியதாவது: விநாயகர் சதுர்த்தி விழாக்களுக்கு தடை விதிப்பது ஒருதலைப்பட்சமானது. விழாக்களை வீடுகளில் கொண்டாட வேண்டும் என்று மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியதால், தமிழகத்தில் விநாயகர் சதுர்த்திக்கு தடை செய்வதாக கூறி மத்திய அரசு மீது பழிபோடுவதை கண்டிக்கிறோம்.
நாடு முழுவதும் அனைத்து மத விழாக்களையும் கொரோனா தொற்று பரவாமல் கொண்டாட வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் சுற்றறிக்கை ஆகும். மேலும், மத்திய அரசு அமல்படுத்திய நீட், புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினார்களா எனவும் கேள்வி எழுப்பினார்.
Source, Image Courtesy - Dinamalar
Next Story